காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கிளிநொச்சியில் போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கந்தசாமி கோயில் முன்றலில் தற்போது இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள், உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை செய்ய வேண்டும், சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.