நாட்டில் வடமாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!!

Report Print Varun in சமூகம்

இலங்கையின் வடமாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 7.00 மணிவரை இந்த சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

அதனடிப்படையில் இப்பகுதிகளுக்கு சுமார் 150 மில்லிமீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படும் அதேசமயம் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மத்திய மாகாணம் மற்றும் அனுராதபுரம், மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீட்டருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பெய்ய கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers