கிளிநொச்சி, முல்லைத்தீவில் இருந்து 20,984 அபாயகரமான வெடிப்பொருட்கள் அகற்றம்

Report Print Yathu in சமூகம்

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 955,511 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 20,984 அபாயகரமான வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதனை மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான இறுதி ஆண்டு விழா பளையில் அமைந்துள்ள ஸார்ப் நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் இருந்தே 20,984 அபாயகரமான வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக கரப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

Latest Offers

loading...