முசலி பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Report Print Ashik in சமூகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழான முசலிப் பிரதேசபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முசலி பிரதேசசபையின் தவிசாளர் ஹலீபத்து சுபியான் தலைமையில் நடைபெற்ற விசேட அமர்வில் இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

16 உறுப்பினர்களை கொண்ட சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதன்போது முஸ்லிம் காங்கிரசின் 2 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும், சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினருமாக ஐவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவரும், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில் 11 உறுப்பினர்களின் வாக்குகளினால் முசலி பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Latest Offers