நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! பெரியசாமி பிரதீபன்

Report Print Gokulan Gokulan in சமூகம்

புதிய அரசாங்கம் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை கைது செய்துள்ளமை நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

காரணம், இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் எனவும், அதனை தாம் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

ஹட்டன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவர் ஒரு தடவை பிரதமர் பதவியினை விட்டுக்கொடுத்து விட்டு கௌரவமாக வெளியேறினார்.

ஆனால் இன்று அவர், பல அரசியல் தோல்விகளை சந்தித்தும் கூட கட்சியின் தலைமை பதவியினை விட்டுக் கொடுக்காமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகிறது.

மாறாக அவருக்கு நெருக்கமானவர்களை கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்தி ஐக்கிய தேசிய கட்சியினை மேலும் பிளவுப்படுத்தி, பலவீனமாக்கி அதனுடாக தலைமை பதவியினை தக்க வைத்து கொள்வதன் மூலம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் தலைமை பதவியினை விட்டுக் கொடுக்காது செயப்படகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முழு உலகத்தினையும் ஈர்த்த விடயமாக காணப்படுவது மத்திய வங்கியின் கொள்ளையாகும். அந்த கொள்ளை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் யாரும் நல்லாட்சி அரசாங்கத்தினால் கைது செய்யப்படாமையினால் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக 65 இலட்சம் பொது மக்கள் இந்த ஜனாதிபதி கோட்டபாயவுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுத்துளார்கள்.

ஆகவே அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை புதிய அரசாங்கம் உடனடியாக கைது செய்து பொது மக்களின் பணத்தினை மீண்டும் அரசாங்கம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Latest Offers

loading...