ராஜிதவின் முன்பிணை மனுமீதான விசாரணை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய முன்னுத்தரவு

Report Print Dias Dias in சமூகம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி எடுத்து கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீமானித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை கைது செய்வதற்கு தயாராக உள்ள நிலையில் , கைது செய்வதை தடுப்பதற்காக முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன 2 முறை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அவை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மூன்றாவது முறையாக மேலுமொரு முன்பிணை மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்தார்.

அதனடிப்படையிலே குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி எடுத்து கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு தொடர்பில் இன்று வழக்கு தொடுநரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் சட்டத்தரணி திருமதி கௌரி சங்கர் தவராசா வழக்குத் தாக்கல் செய்தார் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த பண்டாரநாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா ஆகியோர் முன்நிலையாகியிருந்தனர் அதேசமயம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக சட்டத்தரணி திலீப பீரிஸ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் கி.எல்.பிரியந்த லக்மால் குறித்த உத்தரவினை பிறப்பித்தார்.

Latest Offers

loading...