திருகோணமலை தல்கஸ்வெவ குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல்போன நபரொருவர் தல்கஸ்வெவ குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தையான எம்.ஹப்புஹாமி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தல்கஸ்வெவ குளப்பகுதிக்கு சென்ற நபரொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து தல்கஸ்வெவ குளத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers