மட்டக்களப்பில் சுனாமி நினைவுத்தூபியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட ஆழிப்பேரலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, திருச்செந்தூர் பகுதியில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்று காலை இந் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், பொதுமக்களினால் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தவகையில, நாவலடி பகுதியில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு - கோறளைப்பற்று, பாசிக்குடா கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 09.25 மணியளவில் சுனாமியினால் உயிரிழந்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக வேண்டி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்குடா தூய ஆரோக்கிய மாதா தேவால பங்குத்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானஹே, கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்னகாந் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.