மட்டக்களப்பில் உள்ள அரச அலுவலகங்களில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிப்பு

Report Print Kumar in சமூகம்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15ஆவது ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் இன்று காலை இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் சுனாமியின் போது உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...