வவுனியாவில் நேற்று சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - ஹொரவப்பொத்தனை பகுதியில் நேற்று அரச மதுபானம் விற்பனை செய்தநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 180 மில்லி லீட்டர் கொள்ளளவு உடைய 38 அரச மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நத்தார் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் நாடு பூராகவும் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...