கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 15ஆவது வருட நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சுனாமி ஆழிப்பேரலையின் 15ஆவது வருட நினைவு தினம் கிண்ணியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் முகம்மது கனி தலைமையில் இந்நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் நகரசபை கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு சென்று நினைவுத் தூபிக்கு முன்னால் பிரார்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உலமா சபை, பொலிஸ், மீனவர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers