மீன் பிடிக்கச் சென்றவரை காணவில்லை ! முதலை இழுத்து சென்றதா?

Report Print Yathu in சமூகம்
புதிய இணைப்பு

கிளிநொச்சி ஊரியான் குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் நான்கு மணிநேரங்களின் பின்னர் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் குளத்தில் இன்று மதியம் குளத்திற்கு அவரது மகனுடன் மீன்பிடிக்கச்சென்ற சமயம் குளத்தில் மூழ்கி காணாமலர் போயிருந்தார்.

இதனையடுத்து பிரதேச மக்கள் பொலிசார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன், குளத்திலும் தேடுதல் மேற்கொண்டபோதும், எந்தவிதமான தடையங்களும் மீட்கப்படாத நிலையில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த குளத்தில் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது பிற்பகல் 4.35 மணியளவில் காணாமல் போனவரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சி ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் திடீர் என சற்று முன்னர் தலைமறைவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உரியங்குளத்தில் மீ ன் பிடிக்கச் சென்ற 41 வயதுடைய சுப்பிரமணியம் நவநீதன் என்பவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தந்தையும், மகனும் இவ்வாறு மீ ன் பிடிக்கச் சென்றதாகவும் அதன்போது நீரில் இறங்கிய தந்தை திடீர் என தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மீன்பிடி குளத்தில் முதலைகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் தலைமறைவாகியுள்ள நபரை முதலை இழுத்து சென்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

Latest Offers

loading...