வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனத்துடன், எதிர் திசையில் பயணித்த மோட்டார்சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் கடுமையான சேதத்திற்குள்ளாகியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...