மன்னாரில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார், பிரதான பாலத்தடியில் இன்று காலை 9 மணியளவில் கலை இலக்கிய நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.