அதிரடிப்படையினருக்கு எதிராக போர் குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in சமூகம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றம் சுமத்தும் இரகசிய அறிக்கையை முதல் முறையாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரியான யஸ்மின் சூகா, இந்த அதிகாரிகளின் பெயர்களை அறிக்கையில் உள்ளடக்கியுள்ளார்.

கைதிகள் கொலை செய்யப்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் அதிரடிப்படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு எதிராக 30இற்கும் மேற்பட்டோர், யஸ்மின் சூகாவிடம் சாட்சியமளித்திருப்பதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.