சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சாய்ந்தமருதில்

Report Print Varunan in சமூகம்

கடந்த 2004ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளன.

குறித்த நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் சாய்ந்தமருது லீ மரிடன் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்பாக தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டு லீ மரிடன் மண்டபம் வரை சென்றுள்ளது.

இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆழிப்பேரலையால் உயிர்நீத்தோருக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிரியாணி விஜய விக்கிரம, கௌரவ அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி. மொஹ்மட் றியாஸ், சர்வமத தலைவர்கள், 214 படையணியின் கட்டளை தளபதி கேணல் ஜானக விமலரத்ன, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார, முப்படையினர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.