கஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் கையடக்கத் தொலைப்பேசி: மூன்று அதிகாரிகள் பணி நீக்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் விற்பனையாளரான கஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் கையடக்க தொலைப்பேசி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான மூன்று சிறையதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை தலைமையகம் நடத்திய விசாரணைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சிபானை இம்ரான் பூசா சிறைச்சாலையின் ஏ வன் சிறையறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், செல்போன் மீட்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பூசா சிறையில் கடமையில் இருந்த சிறைச்சாலை அத்தியட்சகர், இரண்டு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.