பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Report Print Theesan in சமூகம்

620 வியாபார நிலையங்களுக்கெதிராக இவ்வருடம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சதானந்தசிவம் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் எமது சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தமாக 668 வியாபார நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை,பண்டங்களை விற்பனை செய்தமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை, பொதிகளில் உள்ளசுட்டுத்துண்டுகளில் திரிவுகளையும், மாற்றங்களையும் செய்தமை, போலித் தயாரிப்புக்கள் மற்றும் SLS (Srilanka standards) குறியீடற்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை, மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்களைஉத்தரவாத சீட்டு (Warranty card/ Guaranty card) வழங்கப்படாமல் விற்பனை செய்தமை, வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதிப்பணத்திற்கு பதிலாக இனிப்புப் பொருட்களை வழங்குகின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு எதிராக எம்மால் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த வருடத்தில் நிலுவையாக இருந்த வழக்குகள் உட்பட மொத்தமாக 620 வழக்குகளுக்கு, சட்ட நடவடிக்கைகளின் பின் ரூபா 25,48000 (இருபத்தைந்து இலட்சத்து நாற்பத்தெட்டாயிரம்) நீதிமன்றால் அபராதமாக விதிக்கப்பட்டது.

தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ந்தும் எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, பொதுமக்களும் பாவனையாளர்களும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்து மூலமாக மாவட்ட செயலகத்தில் உள்ள எமது கிளையில் வழங்க முடியும் அல்லது 1977 என்ற உடனடி தொடர்பு இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...