ஆடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் வாழை நார்

Report Print Steephen Steephen in சமூகம்

ஆடை உற்பத்தி செய்ய வாழை நார்களை பயன்படுத்தும் திட்டம் ஒன்றை இலங்கை ஆடை உற்பத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

ஆடை உற்பத்திக்கான மூலப்பொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு வாழை நார் சிறந்த மாற்று மூலப்பொருள் என்பது சில ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை ஆடை உற்பத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அதிகமான செலவு ஏற்படுகிறது எனவும் வாழை நார்களை பயன்படுத்துவதன் காரணமாக பெருந்தொகையான பணத்தை சேமிக்க முடியும் எனவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சு நிதியை ஒதுக்க உள்ளது. சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.

வாழை நார் ஆடை தொழிற்துறைக்கு பயன்படுத்துவதன் மூலம் நிதி மாத்திரமல்ல சுகாதாரத்திற்கும், சுற்றாடல் மாசுப்படுவதும் குறையும் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...