கிளிநொச்சியில் மகனுடன் மீன்பிடிக்கச்சென்று சடலமாக மீட்கப்பட்ட தந்தை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, ஊரியான் குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் நான்கு மணிநேரங்களின் பின்னர் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் குளத்தில் இன்று மதியம் குளத்திற்கு அவரது மகனுடன் மீன்பிடிக்கச் சென்றவேளை குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து பிரதேசமக்கள், பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன், குளத்திலும் தேடுதல் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, பிற்பகல் 4.35 மணியளவில் காணாமல் போனவரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய சுப்பிரமணியம் நவநீதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...