வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்திய பொலிஸார்: பொதுமக்கள் முற்றுகை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - மன்னார் வீதி பண்டானீச்சூர் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தின் போது பொலிஸாரின் செயற்பாட்டின் காரணமாக பொதுமக்கள் அப்பகுதியினை முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் சற்று நேரம் பதற்றமான நிலமையும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பொலிஸார் குறித்த இளைஞனை அச்சுறுத்தியமையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தினை முற்றுகையிட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த இடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டுள்ளது.

இதன்போது ஒன்று கூடிய பொதுமக்கள் அவசர பொலிஸ் சேவைக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் அவசர பொலிஸ் பிரிவினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களையும், சாரதிகளையும் வவுனியா பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதி வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...