கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்!

Report Print Murali Murali in சமூகம்

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகளின் அடிப்படையில், கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கேங்கவரதன் நிலக்ஸன் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, 2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.