கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - மலையாளபுரம் புதுஜயன் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு இலக்காகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்னேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.