திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் பணிபுரியும் மூவர் மீது தாக்குதல்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய மூவர் நேற்றிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முகாமையாளர் செந்தூர் குமரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குறித்த எரிப்பொருள் நிலையத்தில் பணிபுரியும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 59 வயது ஜோஜ் சில்வர்ஸ்டார், 48 வயது ரொபின்சன் மற்றும் காவலாளியான 37 வயதுடைய மேகல ராசா ஆகிய மூவர் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக மதுபோதையில் வருகை தந்திருந்த இளைஞரொருவர் தான் வழங்கிய பணத்தை விட அதிகமாக வழங்கியதாக தெரிவித்து எரிபொருள் நிலைய பணியாளர்களை தாக்கியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்போது இவ்வாறு எரிபொருள் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும்,சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.