அம்பலாங்கொடை பகுதியில் வாகன விபத்து: இருவர் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

அம்பலாங்கொடை - ருகுணு ரிதியகம பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியும் காரும் நேற்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த 27 மற்றும் 28 வயதான இளைஞர்களே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.