புகையிரத பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள வரப்பிரசாதம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

புகையிரத பயணிகளுக்கு குறைந்த விலையில் மரக்கறி பொதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை ஆகிய புகையிரத நிலையங்களில், இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, புகையிரத பயணிகளுக்கு 10 வகை மரக்கறிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என புகையிரத இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.