புத்தளம் பகுதியில் சூதாட்ட நிலையம் ஒன்று முற்றுகை

Report Print Mubarak in சமூகம்

புத்தளம் பகுதியில் வீடு ஒன்றின் பின்புறமாக இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

புத்தளம் - வென்னப்புவ, மிரிஸ்ஸன்கொட்டுவ பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்த 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 போர்ச் சேவல்கள், 1 கார் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இடத்தை முற்றுகையிட்டபோது அங்கு பணத்துக்காக கோழிகளைச் சண்டையிடச் செய்வதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 போர்ச் சேவல்களைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த போர்ச் சேவல் சூதாட்டம் நத்தார் உற்சவத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பிரதான சந்தேகநபர் சில காலங்களுக்கு முன்னரும் இவ்வாறான சூதாட்ட நிலையத்தை நடத்திச் சென்றிருந்ததாகவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.