குழந்தையை தூக்கி விசியவர் விளக்கமறியலில்

Report Print Sumi in சமூகம்

யாழ்.ஊர்காவற்றுறை - சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியில் போதையில் குழந்தையைத் தூக்கி வீசிய நபர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தனது உறவினர் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற நபர் ஒருவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கியுள்ளார்.

அதை அவதானித்த உறவினர்கள், குறித்தநபரை திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர், குழந்தையைத் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால் காயமடைந்த குழந்தை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர், ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.