கோட்டாபயவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பாதுகாப்புப்படை! சவேந்திர சில்வா

Report Print Rakesh in சமூகம்

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையைச் செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

இதற்கான நிகழ்வு முப்படையினரின் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏற்புரை வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவத் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, உபகரன மாஸ்டர் ஜெனரல் எம்.எ.எ டி ஶ்ரீநாக, போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்திரசேகர, இராணுவ செயலாளர் நாயகம் பி.ஜே. கமகே மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.