இலங்கையில் 70 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம்!

Report Print Ajith Ajith in சமூகம்

தொற்றா நோய்களே இலங்கையில் 70 வீதமான மரணங்களுக்கு காரணம் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே தீமையான உணவுகளை தவிர்க்குமாறு சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மக்களில் 70 வீதமானோர் புற்றுநோய், இருதயநோய், சிறுநீரக நோய்கள் காரணமாக இறக்கின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இரண்டு யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

இந்தநிலையில் பாடசாலைகளுடன் இணைந்து இளநீர் கடைகளை அமைக்குமாறும் அவற்றுக்கு பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் உதவி செய்து பிள்ளைகள் வேறு பானங்களை அருந்தாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் ஒர்கானிக் என்ற இரசாயணக்கலவையற்ற உணவுகளை ஊக்கப்படுத்தவேண்டும் என்று இரண்டு யோசனைகளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.