ஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து அச்சுறுத்திய பொலிஸார்!

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாகிய செ.நிலாந்தனை கைது செய்ய அவரது வீட்டிற்கு இரவில் சென்ற பொலிஸார், அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்றிரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தன் அவர்களின் செங்கலடி ரமேஸ்புரம் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் பொலிஸார் அவரை கைது செய்து கொண்டுபோக முயற்சித்துள்ளனர்.

ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டாரை அச்சுறுத்தியதோடு ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 மணிக்கு ஏறாவூர் பொலிஸிக்கு வருமாறு குடும்பத்தாரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

இரவு வேளையில் சிவில் உடையில் பொலிஸார் சென்றதால் ஊடகவியலாளரின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதேவேளை ஊடகவியலாளர் நிலாந்தனை பொலிஸார் ஏன் கைது செய்ய முயற்சி செய்கின்றனர் என்பது குறித்து எந்த தகவலையும் குடும்பத்தினரிடம் பொலிஸார் கூற மறுத்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.