அரை சொகுசு பேருந்து சேவை! இறுதி தீர்மானம் எடுக்க கால அவகாசம்

Report Print Sujitha Sri in சமூகம்

அரை சொகுசு (SEMI LUXURY) பேருந்து சேவையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கத்தால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பேருந்து சேவை மூலம் பயணிகளுக்கு எந்தவித வசதிகளும் கிடைப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தனியார் அரை சொகுசு பேருந்து சேவை விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், பேருந்துகளின் உரிமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்து இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மக்களின் கோரிக்கைக்கு அமைய அரை சொகுசு பேருந்து சேவையை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.