ஹோட்டல்கள், பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பிரதேச ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிக்குமான கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உணவுபபொருட்களை தயாரித்தல், சுகாதாரமான பாதுகாப்பான முறையில் பொதியிடல், பரிமாறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்களுக்கு தெளிவூட்டடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உரிய முறையில் அமுல்படுத்தாத பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதோடு சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களும் இது தொடர்பான முறைப்பாடுகளை அந்தப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இடம் மேற்கொள்ளலாம் எனவும், அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிண்ணியா பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.