யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபிலகடுவத்த பதவியேற்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபிலகடுவத்த பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.

மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப்பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த மகேஷ் சேனாரத்ன, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.