இலங்கையில் விழுந்து நொருங்கியது இலகுரக விமானம்! நால்வர் பலி!

Report Print Sujitha Sri in சமூகம்

ஹப்புத்தளை நகரில் இடம்பெற்ற இலகுரக விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற இலகுரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் இரண்டு விமானப்படை வீரர்களும் மற்றும் கண்காணிப்பாளர்கள் இருவரும் இருந்ததாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

ஹப்புத்தளை நகரில் இலகுரக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகி விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வை 12 ரக உலங்கு வானூர்தியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு சடலங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிக்சைக்காக ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.