வவுனியா மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று தனது அவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வன்னி மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய றொகான் ஜே சில்வா கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களிலேயே அவர் இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக தம்மிக்க பிஜந்த நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

வன்னி மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்றுள்ள தம்மிக்க பிரியந்த இன்றைய தினம் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.