பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரி வவுனியாவில் பேரணி

Report Print Theesan in சமூகம்

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி வவுனியா மாவட்ட உள்ளூராட்சி பெண்கள் ஒன்றியம் மற்றும் பொதுஅமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் கண்டி வீதி வழியாக, வவுனியா நகரசபை வளாகத்திற்கு சென்று அங்கு உபநகரபிதா சு.குமாரசாமியிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரச அதிபர் எம்.ஹனீபாவிடமும் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆணுக்கு பெண் சமத்துவம் வழங்கப்பட வேண்டும், அடிக்காதே அடிக்காதே பெண்ணை அடிக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.