வவுனியா பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிக்காட்டலில் மாபெரும் சிரமதானம்

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதியின் தாய் நாட்டை சுத்தப்படுத்துவோம் எனும் திட்டத்தின் கீழ் இன்று வவுனியாவில் மாபெரும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கம், வவுனியா பொலிஸார் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இணைந்து மேற்கொண்ட மாபெரும் சிரமதான பணி வவுனியா பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரபகுதியில் இருந்து ஆரம்பமாகிய சிரமதான பணி பொதுவைத்தியசாலை, பேருந்து நிலையம், முதன்மை வீதிகள் போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த செயற்திட்டம் வவுனியாவை அழகுப்படுத்தும் நோக்குடனும், டெங்கினை முற்றாக ஒழிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய தினம் சிரமதான பணியுடன் கூடிய விழிப்புணர்வும் இடம்பெற்றிருந்தது. நாளைய தினத்திலிருந்து விஷேட குழு அமைக்கப்பட்டு நகரை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.