மட்டக்களப்பில் பெருந்தொகையானோர் டெங்கு நோய்க்கு இலக்காகி பாதிப்பு

Report Print Mubarak in சமூகம்

டெங்கு நுளம்பு தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையும் 182 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை 2218 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது போன்று ஆரையம்பதி 38 பேர், களுவாஞ்சிக்குடி 28 பேர், செங்கலடி 17 பேர், ஏறாவூர் 16 பேர், வாழைச்சேனை 13 பேர், காத்தான்குடி 11 பேர், பட்டிப்பளை 06 பேர், ஒட்டமாவடி 06 பேர், வவுனதீவு 03 பேர், கோறளைப்பற்று மத்தி 03 பேர், வாகரை 02 பேர், கிரான் 02பேர், வெல்லாவெளி 01 பேர் ஆகிய பகுதியில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்த வாரம் 182 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம்கொடுக்காத வகையில் சுத்தமாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.