வாகனத்தை சேதப்படுத்திய நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Ashik in சமூகம்

சான்றுப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி செல்வராசா டினேசன் சந்தேகநபர் சார்பாக ஆஜராகி வாதத்ததைத் தொடர்ந்துள்ளதுடன், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன் வழக்கை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் வழக்கு ஒன்றின் தடயப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதையடுத்து நீதிமன்ற பதிவாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.