கொழும்பு புறநகர் பகுதியில் தீ பரவல்! கட்டுப்படுத்துவதற்காக போராடும் தீயணைப்பு படையினர்

Report Print Kanmani in சமூகம்

கொழும்பு - களனி, சேதவத்தை கருப்பு பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கொழும்பு தீயணைப்பு பிரிவிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.