மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் பலி - இருவர் காயம்

Report Print Varunan in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு - காத்தான்குடி, கல்லடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் வயது 72 உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.