கரைச்சி பகுதியில் பராமரிப்பு அற்ற காணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்

நீண்டகாலமாக பராமரிப்பு அற்ற காணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக பல காணிகள் உரிமையாளரின் பராமரிப்பு இன்றி கலாசார பிரழ்வுகள், போதைப்பொருள் பாவனை, சட்டவிரோதச் செயற்பாடுகள், போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கான அசௌகரியங்கள், நுளம்பு மற்றும் விசஜந்துக்களின் பெருக்கம் என்பன அதிகமாக காணப்படுவதாக மக்களிடம் இருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது.

எனவே, காணி உரிமையாளர்கள் உடனடியாகச் செயற்பட்டு தங்களது காணிகளை சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அவ்வாறு சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில் பொதுமக்கள் நன்மை கருதி சபை நிதியில், குறித்த காணிகள் சபை நிதியில் சுத்தம் செய்யப்படுவதுடன் அதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தும் உட்பட குறித்த காணியின் இன்றைய சந்தைப்பெறுமதியின் 2% வீதம் உரிமையாளர் அல்லது பராமரிப்பாளரிடம் இருந்து சட்டபூர்வமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.