இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

ஹபுத்தளை - தம்பபில்லை தோட்டத்திற்கு அருகில் இன்று காலை உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்மான Y12 இலகு ரக விமான விபத்துக்குள்ளானதில், நான்கு விமான படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் கட்டளை அதிகாரி, லெப்ட்டினன்ட் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் ஆகியோர் அடங்கும். எனினும் விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக இராணுவ பிரிடியர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 31 வயதான விமானியும் உயிரிழந்துள்ளார். இவருக்கு எதிர்வரும் மே மாதம் திருமணம் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.