27 ஆண்டுகள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி மரணம்! வியாழேந்திரன் எம்.பி ஆதங்கம்

Report Print Murali Murali in சமூகம்

தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலேயே உயிரிழப்பது இதுவே இறுதி சந்தர்ப்பமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமார் 27 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது, செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவர் படையினரால் கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் தனது 46வது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு இன்று காலை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வரப்பிரசாதங்களுக்கு அடிமையான தமிழ்த் தலைவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியாகிவிட்டது.

எவ்வாறாயினும், வருடக்கணக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலேயே உயிரிழப்பது இதுவே இறுதி சந்தர்ப்பமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.