யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்கள் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தினை பிரதேச மக்கள் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்வதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 3 டிப்பர்களில் மண் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இரண்டு டிப்பர் வாகனங்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், ஒரு வாகனம் மற்றும் அதன் சாரதியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது பிரதேச மக்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.