பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

Report Print Sumi in சமூகம்

புங்குடுதீவு 11ஆம் வட்டார பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என கூறும் பொலிஸார், மீட்கப்பட்ட சடலத்தில் தொப்புள் கொடியும் காணப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புங்குடுதீவு 11ஆம் வட்டார பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.