எரிபொருள் கடத்தலுடன் தொடர்புடைய 7 இலங்கையர்கள் நைஜீரியாவில் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டவிரோத எரிபொருள் கடத்தல் சம்பந்தமாக 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய கடற்படையினர் கடந்த ஒரு மாத காலத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் நைஜீரிய பிரஜைகள் எனவும், 7 பேர் இலங்கை பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 7 படகுகளை நைஜீரிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் மேற்கொண்டிருந்த திட்டத்திற்கு அமைய பெரியளவிலான எரிபொருள் கடத்தப்பட்டிருந்தால், நைஜீரியாவில் எரிபொருள் துறையில் பாரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.