கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி!

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதுடைய மங்களதேவன் விஜயகுமார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த நிலையில் பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.