கிளிநொச்சியில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து இளைஞர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - மலையாளபுரம், புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் அண்மையில் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்தநபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.

அந்தவகையில், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் தப்பித்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.